பொலிஸ், இராணுவ கெடுபிடிகளுக்கு மத்தியில், கோப்பாய் மாவீரர் துயிலுமில்ல பகுதியில் சிரமதானப்பணி முன்னெடுப்பு

கோப்பாய் மாவீரர் துயிலுமில்ல பகுதியில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் இன்றைய தினம் சிரமதானப்பணிகளை முன்னெடுத்திருந்தனர்.

குறித்த பகுதியில் கடந்த இரு தினங்களுக்கு முன்பிருந்து இருந்து, இராணுவத்தினர் துப்பரவு செய்து, அங்கு காவலரண்களை அமைத்து இரவு, பகலாக கடமைக்கு இருத்தப்பட்டுள்ளனர்.

அத்துடன் நேற்றில் இருந்து பொலிசாரும் கடமைக்கு அமர்த்தப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் குறித்த பகுதிக்கு இன்று காலை சென்ற தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் துப்பரவு பணியை மேற்கொண்டனர்.

கடந்த வருடங்களில் குறித்த பகுதியில் எழுச்சியாக மாவீரர் வாரம் கடைப்பிடிக்கப்பட்டு மாவீரர் தினம் உணர்சிபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply