யாழில் விபத்து: பாடசாலை மாணவி உட்பட இருவர் படுகாயம்

<!–

யாழில் விபத்து: பாடசாலை மாணவி உட்பட இருவர் படுகாயம் – Athavan News

யாழ்ப்பாணம் – தாவடி சந்தியில் இலக்கத் தகடு அற்ற பேரூந்து மோதியதில் பாடசாலை மாணவி உட்பட இருவர் படுகாயமடைந்துள்ளனர்.

இன்று (செவ்வாய்க்கிழமை) காலை இடம்பெற்ற விபத்தில் மோட்டார் சைக்கிலில் சென்ற கொக்குவில் இந்துக் கல்லூரியில் கல்வி கற்கும் மாணவி உட்பட ஆண் ஒருவருமே படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் சுண்ணாகம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


Leave a Reply