பீடைக்கொல்லி பதிவாளர் பதவியிலிருந்து கலாநிதி ஜே.ஏ.சுமித் நீக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.
7 வருடங்களாகத் தடை செய்யப்பட்டிருந்த 5 பீடைக்கொல்லி வகைகளுக்கான தடையை நீக் கியமை தொடர்பில் அவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதனடிப்படையில் பீடைகொல்லி பதிவாளரினால் 2021.11.01 வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை செயலிழக்கச் செய்வதுடன் அவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.






