வவுனியா மேலதிக அரசாங்க அதிபருக்கு கொரோனா

வவுனியா மாவட்ட மேலதிக அரசாங்க அதிபருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

வவுனியா மாவட்ட மேலதிக அரசாங்க அதிபருக்கு காய்ச்சல் ஏற்பட்ட நிலையில், அவருக்கு  நேற்று (திங்கட்கிழமை) முன்னெடுத்த துரித அன்டிஜன் பரிசோதனையில் கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து அவர் சிகிச்சைக்காக தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன், அவருடன் தொடர்பினை பேணியவர்களையும் தனிமைப்படுத்த சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இதேவேளை மீண்டும் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருகின்றமையினால், பொதுமக்கள் சுகாதார நடைமுறைகளை இறுக்கமாக கடைப்பிடிக்க வேண்டும் என சுகாதாரப் பிரிவினர்  வலியுறுத்தியுள்ளனர்.

Leave a Reply