அமெரிக்க டொலர்களை டுபாய்க்கு கடத்த முற்பட்ட நபர் கைது

140,60,000 ரூபா பெறுமதியான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நாணயங்களை டுபாய்க்கு கடத்த முற்பட்ட நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இன்று செவ்வாய்க்கிழமை காலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து, குறித்த நபரை சுங்கப்பிரிவினர் கைது செய்துள்ளனர்.

சந்தேக நபர் கொழும்பில் வசிக்கும் 27 வயதான வர்த்தகர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர் தனது கைப்பையில் 10 மில்லியன் இலங்கை ரூபா மற்றும் 20,000 அமெரிக்க டொலர்களை மறைத்து வைத்திருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply