இலங்கை வீடுகளில் எரிவாயு வைத்திருப்பது வெடிகுண்டு இருப்பது போன்று ஆபத்தான விடயமாகியுள்ளதென நுகர்வோர் விவகார அதிகார சபையின் முன்னாள் நிறைவேற்றுப் பணிப்பாளர் துஷான் குணவர்தன தெரிவித்துள்ளார்.
இதற்காக பயன்படுத்தப்படும் உள்நாட்டு வாயுக்களின் இரசாயன விகிதத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளமையினால் இந்த ஆபத்து ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டின் அண்மைய நாட்களாக பல இடங்களில் எரிவாயு சிலிண்டர்கள் அதிக அளவில் வெடிப்பதற்கு இந்த இரசாயன மாற்றமே காரணம்.
நாட்டில் எரிவாயு வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள இரண்டு பிரதான நிறுவனங்களும் இணைந்து இந்த இரசாயன மாற்றத்தை செய்துள்ளது.
மேலும் இது தொடர்பாக பொறுப்பான அமைச்சர்களிடம் கூறிய போதிலும் அவர்கள் அதனை கவனத்தில் கொள்ளவில்லை என சுட்டிக்காட்டியுள்ளார்.
இது ஒரு மோசடியான செயல் எனவும் கொலைக்கு உதவும் வகையிலான செயல் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.






