
பீடை கொல்லி பதிவாளர் Dr. ஜே.ஏ. சுமித் பதவி நீக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர், மஹிந்தானந்த அலுத்கமகே தெரிவித்துள்ளார்.
கடந்த 2014ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட Glyphosate உள்ளிட்ட 5 பீடைகொல்லிகளுக்கான (Glyphosate, Propanil, Carbary1, Cholopyrifos, Carbofuran) தடையை நீக்கும் அதி விசேட வர்த்தமானி அறிவித்தலை நேற்றையதினம் (22) வெளியிட்டமை தொடர்பில் குறித்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, குறித்த அதி விசேட வர்த்தமானியும் வலுவிழக்கச் செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
