தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்துக்கு அதிகளவு மரக்கறி! விலையும் குறைவு

நாட்டின் பல பாகங்களிலிருந்தும் தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்திற்கு இன்று (23) அதிகளவு மரக்கறிகள் வந்து சேர்ந்ததாக பொருளாதார நிலையத்தின் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்திற்கு இன்றைய தினம் மலையகத் திலிருந்து கரட், லீக்ஸ், பீற்றூட், கோவா ஆகிய மரக்கறிகள் கிடைத்துள்ளன.

அண்மைக்கால மரக்கறிகளின் மொத்த விற்பனை விலைக்கு ஏற்ப கிலோ ஒன்றுக்கு 50 முதல் 60 ரூபா வரை விலை குறைந்துள்ளதாகவும் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

தம்புள்ளை பொருளாதார நிலையத்திற்கு இன்று கத்தரிக்காய், பயற்றங்காய், புடலங்காய், உருளைக்கிழங்கு, தக்காளி போன்ற மரக்கறிகள் கணிசமான அளவில் கிடைத்துள்ளதாகவும் தொலைதூரப் பகுதிகளிலிருந்து மரக்கறிகளைக் கொள்வனவு செய்யும் வியாபாரிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளமையே விலை வீழ்ச்சிக்குக் காரணம் எனவும் தெரிய வந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *