யாழில் கோர விபத்து- ஆபத்தான நிலையில் மாணவி உட்பட இருவர்

சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தாவடிப் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பாடசாலை மாணவி உட்பட இருவர் படுகாயமடைந்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விபத்து இன்று காலை இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணம் – தாவடி சந்தியில் இலக்கத் தகடு அற்ற பஸ் மோதியதில் பாடசாலை மாணவி உட்பட இருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கொக்குவில் இந்துக் கல்லூரியில் கல்வி கற்கும் மாணவி பயணித்த மோட்டார் சைக்கில் மீதே பஸ் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. தந்தையும் மகளுமே இந்த விபத்தில் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் சுன்னாகம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

“கொழும்பு தமிழின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/colombotamil

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் கொழும்பு தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Get the latest Tamil news here. You can also read all the news by following us on Twitter, Facebook and Telegram.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *