திருகோணமலையில் ஏற்பட்ட துயரம்! உயிரிழந்தோர் விபரம் வெளியானது

திருகோணமலையில் இன்று(23) காலை இடம்பெற்ற கோர சம்பவத்தில் ஆறு பேர் உயிரிழந்துள்ளனர்.

அத்துடன், 14 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதுடன், மீட்கப்பட்டவர்களில் ஒருவர் ஆபத்தான நிலையில் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

திருகோணமலையில் இழுவைப்படகு கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் மாணவர்கள் உள்ளிட்ட பலர் உயிரிழந்த சம்பத்தையடுத்து கிண்ணியாவில் பெரும்பாலான கடைகள் மூடப்பட்டு துக்கம் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.

அத்துடன், குறித்த பகுதியில் அமைதி நிலையை பேணும் வகையில் பெருமளவு இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

சடலமாக மீட்கப்பட்டவர்களில் பலர் பாடசாலை மாணவர்கள் என தெரியவரும் அதேவேளை தொடர்ந்தும் தேடுதல் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

குறிஞ்சாக்கேணி பகுதியில் பால நிர்மாண வேலைகள் நடப்பதால், தற்காலிகமாக சேவையில் ஈடுபட்ட மோட்டார் இழுவைப் படகு உடைந்து, கவிந்த நிலையிலேயே குறித்த அனர்த்தம் நேர்ந்துள்ளதாக தெரியவருகிறது.

“கொழும்பு தமிழின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/colombotamil

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் கொழும்பு தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Get the latest Tamil news here. You can also read all the news by following us on Twitter, Facebook and Telegram.

Leave a Reply