15 வயது சிறுமியை கர்ப்பிணியாக்கிய குடும்பஸ்தர்; சகோதரி, தாய் கைது

அம்பாறை திருக்கோவில் பிரதேசத்தில் 15 வயது சிறுமி ஒருவரை 7 மாத கர்ப்பிணியாக்கிய சகோதரியின் கணவர் தலைமறைவாகியுள்ளார்.

இந்த நிலையில் சிறுமியின் தாயார் மற்றும் சகோதரி உட்பட இருவரை பொலிஸார் நேற்று கைது செய்துள்ளனர்.

நேற்று செவ்வாய்க்கிழமை (22) கைது செய்துள்ளதாக திருக்கோவில் பொலிஸ் நிலைய பெரும் குற்றத்தடுப்பு பொலிஸ் பொறுப்பதிகாரி எஸ்.எஸ்.எஸ்.சமந்த தெரிவித்துள்ளார்.

திருக்கோவில் பொலிஸ் பிரிவிலுள்ள பிரதேசத்தில் உள்ள 15 வயது சிறுமி தாய் மற்றும் திருமணம் முடித்த சகோதரியுடன் வாழ்ந்து வந்துள்ளார்.

இந்த நிலையில் 31 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையான சகோதரியின் கணவன் குறித்த சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொண்ட நிலையில் சிறுமி 7 மாத கர்ப்பணியாகியுள்ளார்.

இதனையடுத்து இது தொடர்பாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் சிறுவர் பிரிவு பொலிஸார் விசாரணையை மேற்கொண்டுள்ளனர்.

இந்த நிலையில் சிறுமியை கர்ப்பமாக்கிய சிறுமியின் சகோதரியின் கணவர் தலைமறைவாகியதையடுத்து சிறுமியை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

இதனையடுத்து தலைமறைவாகிய நபரை பொலிஸார் தேடும் நடவடிக்கையில் ஈடுபட்டுவருவதுடன் குறித்த சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொள்ள உடந்தையாக இருந்த சிறுமியின் 54 வயதுடைய தாயார் மற்றும் சிறுமியின் 24 வயதுடைய சகோதரி ஆகிய இருவரையும் நேற்று திங்கட்கிழமை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் இன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

“கொழும்பு தமிழின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/colombotamil

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் கொழும்பு தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Get the latest Tamil news here. You can also read all the news by following us on Twitter, Facebook and Telegram.

Leave a Reply