
தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் வெளியான திரைப்படம் அண்ணாத்த. சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் அனிருத் இசையில் இந்த படம் வெளியானது.
தீபாவளிக்கு வெளியான இந்த படத்தில் ரஜினிகாந்துடன் இணைந்து குஷ்பூ, மீனா, கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, சூரி, சதீஷ், லிவிங்ஸ்டன் என பல்வேறு திரையுலகப் பிரபலங்கள் இணைந்து நடித்திருந்தனர். இந்தப் படம் வசூலில் மிகப்பெரிய சாதனை படைத்ததாக சொல்லப்பட்டு வந்தது.
படம் வெளியான வாரம் திரையரங்குகளில் நல்ல கூட்டம் இருந்தாலும் அதன் பின்னர் படிப்படியாக கூட்டம் குறையத் தொடங்கிய நிலையில் கொட்டி தீர்த்த கன மழையால் பல திரையரங்குகள் வெறிச்சோடி காணப்பட்டன.
இதன் காரணமாக அண்ணாத்த திரைப்படம் வசூலில் பலத்த அடியை வாங்கியதாக சொல்லப்படுகிறது.
உண்மையில் இதுவரை இந்த படம் ரூபாய் 169 கோடி வசூல் செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. படத்திற்காக ஆன மொத்த செலவு ரூபாய் 182 கோடி. இதனால் இந்தப் படம் பதினான்கரை கோடி நஷ்டம் அடைந்திருப்பதாக சினிமா வட்டாரங்களில் கூறி வருகின்றனர்.
இதன் காரணமாகவே ரஜினி தன்னுடைய அடுத்த படத்தில் சம்பளத்தை குறைத்துக் கொண்டதாக கூறப்படுகிறது.
“கொழும்பு தமிழின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/colombotamil
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் கொழும்பு தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Get the latest Tamil news here. You can also read all the news by following us on Twitter, Facebook and Telegram.