மஹிந்த சமரசிங்க பதவி விலக தீர்மானித்துள்ளதாகப் பாராளுமன்றத்தில் அவர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா மற்றும் மெக்ஸிக்கோவுக்கான இலங்கை தூதுவர் பதவியை ஏற்கும் நோக்கில் இன்னும் சில தினங்களில் தனது பதவியை இரா ஜினாமா செய்யவுள்ளதாகப் பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த சமர சிங்க இன்றைய தினம் பாராளுமன்றில் அவர் தெரிவித்தார்.
மஹிந்த சமரசிங்கவின் பதவி வெற்றிடத்திற்கு, களுத்துறை மாவட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உறுப்பினரான மஞ்ஜுல லலித் வர்ணகுமார தெரிவு செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த பாராளுமன்றத் தேர்தலில் மஞ்ஜுல லலித் வர்ணகுமார 46,542 விருப்பு வாக்குகளை பெற்றுக்கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.






