திருகோணமலை – குறிஞ்சாக்கேணி பகுதியில், இன்று காலை இடம்பெற்ற உயிரிழப்புகளுக்கு, அதிகாரிகளின் அசமந்த நடவடிக்கை காரணமென தெரிவித்து கிண்ணியா மக்கள் வீதியில் இறங்கி போராட்டங்களை நடத்த ஆரம்பித்துள்ளனர்.
இதனையடுத்து அப்பகுதியில் பெரும் பதற்றமான நிலைமையொன்று தோன்றியுள்ளது.
கிண்ணியா பிரதேச செயலகத்தை மக்கள் முற்றுகையிட்டு,டயர்களை எரித்து போராட்டம் நடத்துவதால் அங்கு பதற்ற நிலைமை ஏற்பட்டுள்ளது.
உயிரிழந்த சிறார்களின் சடலங்கள், பிரேத பரிசோதனைகளுக்காக கிண்ணியா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன.
அங்குள்ள அரச அலுவலகங்களுக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.






