ஜனாதிபதியின் வெளிநாட்டு பயணங்களின் பின்னர் புதிய அமைச்சரவை நியமனங்கள்

ஜனாதிபதியின் இங்கிலாந்து மற்றும் ஜப்பான் விஜயத்தின் பின்னர் புதிய அமைச்சரவை அமைச்சர்களின் பதவிப்பிரமாணம் இடம்பெறும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை தங்களுக்கு மேலும் பத்து அமைச்சரவை அமைச்சர் பதவிகளை வழங்குமாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஜனாதிபதியிடம் எழுத்து மூலம் கோரிக்கையை விடுத்துள்ளது.

இதன்படி மேலும் 10 அமைச்சரவை அமைச்சர்கள் நியமிக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை ஜனாதிபதி மற்றும் பிரதமர் வகிக்கும் அமைச்சுப் பதவிகளுக்கு மேலதிகமாக 18 அமைச்சரவை அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளதுடன் அரசாங்கத்தில் 38 இராஜாங்க அமைச்சுப் பதவிகளும் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply