ரி-20 உலகக்கிண்ணத் தொடருக்கான மேற்கிந்திய தீவுகள் அணி அறிவிப்பு!

ரி-20 உலகக்கிண்ணத் தொடரில் விளையாடவுள்ள மேற்கிந்திய தீவுகள் அணியின் விபரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

15 பேர் கொண்ட நிக்கோலஸ் பூரான் தலைமையிலான அணியில், இடது கை ஆரம்ப துடுப்பாட்ட வீரரான எவின் லூயிஸ் இடம்பிடித்துள்ளார்.

அணியில் வலது கை சுழற்பந்து வீச்சு சகலதுறை வீரரான யானிக் கரியா மற்றும் இடது கை துடுப்பாட்ட சகலதுறை வீரரான ரேமன் ரெய்ஃபர் ஆகியோர் உலகக்கிண்ணத் தொடரில் அறிமுகமாகின்றனர்.

இருப்பினும், அனுபவமிக்க ரி-20 நட்சத்திரங்களான ஆண்ட்ரே ரசல் மற்றும் சுனில் நரைனுக்கு இடமில்லை.

நிக்கோலஸ் பூரான் தலைமையிலான அணியில், ரோவ்மேன் பவல், எவின் லூயிஸ், பிராண்டன் கிங், கைல் மேயர்ஸ், ஒடியன் ஸ்மித், ஜோன்சன் சார்லஸ், ஷிம்ரோன் ஹெட்மியர், ஜேசன் ஹோல்டர், ரேமன் ரெய்ஃபர், ஓபேட் மெக்காய், அல்ஸாரி ஜோசப், அகீல் ஹொசைன், ஷெல்டன் கொட்ரெல், யானிக் கரியா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

Leave a Reply