ரணில் விக்கிரமசிங்க மீது என்னால் முறைப்பாடு செய்ய முடியும்! மஹிந்தானந்த

என்னை கொலை செய்ய முயற்சித்த விவகாரம் தொடர்பில், ரணில் விக்கிரமசிங்க மீது என்னால் முறைப்பாடு செய்ய முடியும். எனினும் பிரதமர் மஹிந்த ராஜபக்ச அந்த விடயத்தை விட்டு விடுங்கள் என என்னிடம் கேட்டுக்கொண்டதாலேயே ரணில் மீது முறைப்பாடு செய்யவில்லை என அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கம தெரிவித்தார்.

வரவு – செலவு திட்டத்தின் குழுநிலை விவாதத்தில் இன்று கலந்துகொண்டு ஷஉரையாற்றும்போதே, அவர் இதனை தெரிவித்துள்ளார்.

மேலும், கடந்த நல்லாட்சி அரசாங்கத்தில், நான் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பிகள் பலர் பழிவாங்கப்பட்டோம். முதல் 10 பத்து திருடர்கள் என அப்போதைய ஆளுந்தரப்பினர் தொடர்பில் நான் முறைப்பாடு செய்து 2 வருடங்களாகின்றன. எனினும் இதுவரையில் ஒருவரிடமிருந்து கூட வாக்குமூலம் பெறப்படவில்லை.

இதேவேளை, எதிர்க்கட்சியின் முன்வரிசையில் உள்ள உறுப்பினர் ஒருவர் தொடர்பில் என்னிடம் இருக்கும் ஆதாரங்களை வைத்து வாக்குமூலம் வழங்கினால் பிணை கூட வழங்காது அவரை கைது செய்து சிறையில் அடைப்பார்கள். அந்த முன்வரிசை உறுப்பினர் மட்டுமல்ல அவரது முழு குடும்பமும் கைது செய்யப்படுவார்கள்

அதேபோன்று முன்னாள் எம்.பி ரஞ்சன் ராமநாயக்கவுடன் இணைந்து முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க என்னை கொலை செய்ய முயன்றார் என முறைப்பாடு செய்தால் ரணிலும் கைது செய்யப்படுவார்.

இந்த விடயத்தை விட்டுவிடுங்கள் என பிரதமர் மஹிந்த ராஜபக்ச கேட்டுகொண்டதாலேயே நான் இந்த விடயத்தை விட்டுவிட்டேன் என்றார்.

படகு விபத்தில் உயிரிழந்தவர்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளுமாறு கிழக்கு மாகாண ஆளுநர் கோரிக்கை!

Leave a Reply