திருகோணமலை கோணேஸ்வரா ஆரம்பப் பாடசாலை ஆசிரியர் ஒருவருக்கு கொரோனா!

திருகோணமலையின் பிரபல கல்லூரியான கோணேஸ்வராக் கல்லூரியின் ஆரம்பப் பாடசாலையில் கற்பிக்கும் ஆசிரியர் ஒருவருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

நோய் அறிகுறிகள் காணப்பட்ட நிலையில் குறித்த ஆசிரியர் தன்னை பரிசோதனைக்கு உட்படுத்தியிருந்த நிலையில் இன்று மாலை குறித்த முடிவுகள் வெளியாகியுள்ளன என்று தெரியவந்துள்ளது.

கடந்த பத்து நாட்களுக்கு முன்னர் தரம் 2இல் கல்வி பயிலும் மாணவர்கள் மூவருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இன்று ஆசிரியருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து பாடசாலை நிர்வாகம் நடவடிக்கை எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தென்மராட்சியில் பெருமளவு வெடிபொருட்கள் மீட்பு!

Leave a Reply