மாவீரர் தின நிகழ்வு: தடை விதிக்கக்கோரிய மனு தள்ளுபடி- ஊர்காவற்றுறை நீதிமன்றம் தீர்ப்பு

மாவீரர் தின நிகழ்வுகளுக்குத் தடை விதிக்கக்கோரிய மனுவை ஊர்காவற்துறை நீதிமன்றம் இன்று (23) தள்ளுபடி செய்துள்ளது.
ஊர்காவற்துறை மற்றும் நெடுந்தீவு பொலிஸாரினால் இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
ஊர்காவற்துறை பொலிஸாரினால் 5 பேருக்கு எதிராகவும், நெடுந்தீவு பொலிஸாரினால் ஒருவருக்கு எதிராகவும் மாவீரர் தினத்தை நடத்த தடை விதிக்குமாறு கோரி, மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்நிலையில் குறித்த மனுவை விசாரித்த ஊர்காவற்துறை நீதிவான் அதனைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Leave a Reply