குறிஞ்சாக்கேணி படகு விபத்து. அரசாங்கத்துக்கு நேரடி தொடர்பு இல்லை! ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ

படகு சேவையில் சிறுவர்களை அழைத்து செல்லும் வேளையில் உயிர் பாதுகாப்பு கவசங்களை பயன்படுத்தவில்லை, இது சட்டவிரோதமான செயற்பாடு, ஆகவே நாட்டின் சட்டத்திற்கு அமைய இது கொலை, இதனை அரசியல் பக்கம் திருப்ப வேண்டாம் என நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று எதிர்க்கட்சிக்காரர்களின் உரைக்கு பதில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும், கிண்ணியா குறிஞ்சாக்கேணி பகுதியில் இடம்பெற்றுவரும் பாலத்தின் நிர்மாண பணிகள் கடந்த நல்லாட்சி அரசாங்கத்திலேயே ஆரம்பிக்கபட்டது.

இந்த விபத்தை அரசாங்கத்தின் மீது குற்றச்சாட்டு முன்வைக்க முயற்சிக்கிறார்கள்.

எங்களின் அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததன் பின்னரே மதிப்பீடு செய்யப்பட்டு விலைமனு கோரல் விடுக்கப்பட்டு பாலத்தின் நிர்மாண பணிகள் ஆரம்பிக்கப்பட்டன. மக்களின் பாவனைக்கு விரைவாக பெற்று கொடுப்பதற்காகவே இந்த பாலத்தின் நிர்மாண பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.

அதுமட்டுமல்ல பாலம் திருத்த பணிகள் காரணமாக மாற்று வீதியும் வழங்கப்பட்டிருந்தது. ஆனால் மாற்று வீதி 3 கிலோமீட்டர் தூரம். ஆகவே மக்கள் அந்த மாற்றுப்பாதையை பாவிக்க விரும்பவில்லை.

அதேபோல் படகு சேவையும் மாநாகரசபை மூலமாகவே இயங்கியுள்ளது. கிண்ணியா நகரசபையில் ஒன்று ஐக்கிய மக்கள் சக்தி அல்லது சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ்தான் ஆட்சி அமைத்துள்ளது. அவர்கள் தான் படகு சேவைக்கும் அனுமதி வழங்கியுள்ளனர். அதனால் இந்த படகு சேவைக்கும் அரசாங்கத்துக்கும் நேரடி தொடர்பு எதுவும் இல்லை.

விபத்துக்குள்ளான படகு சேவையில் சிறுவர்களை அழைத்து செல்லும் வேளையில் உயிர் பாதுகாப்பு கவசங்களை பயன்படுத்தவில்லை, இது சட்டவிரோதமான செயற்பாடு, ஆகவே நாட்டின் சட்டத்திற்கு அமைய இது கொலை, இதனை அரசியல் பக்கம் திருப்ப வேண்டாம் என அவர் தெரிவித்துள்ளார்.

திருகோணமலை கோணேஸ்வரா ஆரம்பப் பாடசாலை ஆசிரியர் ஒருவருக்கு கொரோனா!

Leave a Reply