குறிஞ்சாக்கேணி – கிண்ணியாவிற்கு நாளை முதல் பஸ் சேவை!

கிண்ணியாவில் படகு கவிழ்ந்ததில் ஆறு பேர் பலியானதையடுத்து, நாளை முதல் குறிஞ்சாக்கேணியிலிருந்து, கிண்ணியாவிற்கு இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் சேவையை ஈடுபடுத்தப்படவுள்ளதாக கிழக்கு மாகாண செயலாற்று முகாமையாளர் எம்.ஏ.உவைஸ் தெரிவித்தார்.

இலங்கை போக்குவரத்துச் சபையின் தலைவர் கிங்ஸிலி ரணவக்கவின் பணிப்புரைக்கமைய, குறிஞ்சாக்கேணியிலிருந்து கிண்ணியாவிற்கு பாடசாலை மாணவர்கள் ஆசிரியர்களை ஏற்றிச் செல்வதற்காக நாளை ஆரம்பிக்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இச்சேவை தொடர்ந்தும் ஒவ்வொரு நாளும் இடம்பெறவுள்ளதாகவும் முகாமையாளர் தெரிவித்தார்.

கோப்பாயில் கோரவிபத்து: முதியவர் மீது ஏறிய டிப்பர்!

Leave a Reply