கத்திவெட்டுத் தாக்குதலில் ஒருவரது கை விரல் துண்டிப்பு: சாவகச்சேரியில் சம்பவம்!

யாழ்ப்பாணம், சாவகச்சேரி சந்தையில் இடம்பெற்ற கத்திவெட்டுத் தாக்குதலில் ஒருவரது கை விரல் துண்டிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் இன்று மாலைஇடம்பெற்றதாக சாவகச்சேரிப் பொலிஸார் தெரிவித்தனர்.

இருவருக்கிடையில் இடம்பெற்ற வாய்த்தர்க்கம் கத்திவெட்டில் முடிவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

படுகாயமடைந்தவர் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இதுதொடர்பில் மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply