நாமல் உள்ளிட்ட மேலும் சில அமைச்சர்கள் விரைவில் பதவியேற்பார்கள் – பிரசன்ன

<!–

நாமல் உள்ளிட்ட மேலும் சில அமைச்சர்கள் விரைவில் பதவியேற்பார்கள் – பிரசன்ன – Athavan News

நாட்டில் மேலும் சில அமைச்சரவை அமைச்சர்கள் விரைவில் பதவியேற்பார்கள் என நகர அபிவிருத்தி அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

இது இந்த வாரம் அல்லது அடுத்த வாரத்தில் பதவியேற்பு நிகழ்வு நடைபெறும் என அவர் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கும் அமைச்சுப் பதவி கிடைக்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரசியலமைப்புக்கு அமைவாக ஜனாதிபதி 30 அமைச்சரவை அமைச்சர்களை நியமிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.


Leave a Reply