6 பேரின் உயிரிழப்புக்குப் பின்னர் குறிஞ்சாக்கேணி- கிண்ணியாவிற்கு இடையில் பேருந்து சேவை!

குறிஞ்சாக்கேணியிலிருந்து கிண்ணியாவிற்கு இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பேருந்து சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக கிண்ணியா பேருந்து சாலை பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.

மிதப்பு பாலம் கவிழ்ந்ததில் ஆறு பேர் உயிரிழந்ததை அடுத்து, இன்று (புதன்கிழமை) முதல் இந்த பேருந்து சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளது.

அதன்படி, காக்காமுனையில் இருந்து நடுத்தீவு, குறிஞ்சாக்கேணி ஊடாக கிண்ணியாவுக்கு பேருந்துச் சேவை இன்று முதல் முன்னெடுக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கிண்ணியா குறிஞ்சாக்கேணியில் நேற்று இடம்பெற்ற இழுவைப்படகு விபத்தில் பல மாணவர்கள் உட்பட 6 பேர் உயிரிழந்துள்ளனர்.

Leave a Reply