புத்தூர் வாதரவத்தையில் 92 குடும்பங்களுக்கும், மானிப்பாய் கட்டுடையில் 20 குடும்பங்களுக்கும், ஊரெழுவில் 55 குடும்பங்களுக்குமாக மொத்தம் 167 குடும்பங்களுக்கு உலர் உணவு நிவாரண பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது.
பூமணி அம்மா அறக்கட்டளையினரால், மேற்குறித்த பகுதிகளில் வசிக்கும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குறைந்த வருமானங்களைக் கொண்ட 167 வறிய குடும்பங்களுக்கே இந்த வாழ்வாதார நிவாரண பொருட்கள் அறக்கட்டளையின் இலங்கை நிர்வாகிகளால் வழங்கப்பட்டது.
இதனபோது, தலைவர் நா.தனேந்திரன், செயலாளர் ந.விந்தன் கனகரட்ணம், பொருளாளர் யோசேப், உட்பட அறக்கட்டளையின் நிர்வாக சபை உறுப்பினர்களும் பங்குகொண்டிருந்தனர்.


யாழில் டெங்கு நோய் எந்த நேரத்திலும் தீவிரமாக பரவும் வாய்ப்பு! ஆ.கேதீஸ்வரன்






