சட்டவிரோதமாக நடத்திசெல்லப்பட்ட மாடறுக்கும் நிலையம் முற்றுகை: அறுவர் கைது!

கேகாலை மாவனெல்ல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கிரிங்கதெனிய பிரசேத்தில், சட்டவிரோதமாக நடத்திசெல்லப்பட்ட மாடறுக்கும் நிலையமொன்று முற்றுகையிடப்பட்டுள்ளதுடன், ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மானவெல்லலை பிரதேசத்தை சேர்ந்த அறுவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

நாரங்பெத்த பொலிஸ் விசேட அதிரடிப்படையினர், மாவனெல்லை பொலிஸார் இணைந்து இந்த சுற்றிவளைப்பை மேற்கொண்டுள்ளனர்.

இதன்போது, இறைச்சிக்காக கொல்லப்பட்ட 08 மாடுகளின் உடல்களையும் பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் கைப்பற்றியுள்ளனர்.

குறிஞ்சாக்கேணி படகு விபத்து: கடும் எதிர்ப்பால் இடைநிறுத்தப்பட்ட பேருந்து சேவை!

Leave a Reply