பருத்தித்துறை நகரசபையின் வரவு செலவுத் திட்டம் நிறைவேறியது!

பருத்தித்துறை நகரசபையின் 2022 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் சபைத் தலைவரின் மேலதிக ஒரு வாக்கால் நிறைவேறியது.

சபையின் விசேட கூட்டம் இன்று புதன்கிழமை காலை 9.00 மணியளவில் ஆரம்பமான போது சபைத் தலைவர் யோசப் இருதயராஜா வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பித்தார். அதை வாக்கெடுப்புக்கு விடுமாறு கோரியதை அடுத்து வாக்கெடுப்புக்கு விடப்பட்டது.

வாக்கெடுப்பின் போது ஆளும்கட்சியான தமிழரசுக்கட்சி உறுப்பினர்கள் ஐந்து பேரும் மற்றும் தமிழர் விடுதலைக்கூட்டணி, சுயேச்சைக்குழு ஆகியவற்றின் தலா ஒரு உறுப்பினருமாக ஏழு பேர் ஆதரவாகவும் எதிர்க்கட்சியான தமிழ் தேசிய மக்கள் முன்னணியைச் சேர்ந்த 6 உறுப்பினர்களும், ஈ.பி.டி.பியைச் சேர்ந்த ஒரு உறுப்பினருமாக 7 பேர் எதிராக வாக்களித்தனர்.

மொத்தமாகவுள்ள 15 உறுப்பினர்களில் ஈ.பி.டி. பியைச் சேர்ந்த ஒரு உறுப்பினர் சமூகமளிக்காததால் வாக்கெடுப்பில் சமநிலை ஏற்பட்டது.

இதனால் வெற்றி தோல்வியை தீர்மானிக்க வேண்டிய சூழ்நிலையில் சபைத் தலைவருக்கு உள்ள தற்துணிவு அதிகாரத்துக்கமைய அவர் மேலதிக ஒரு வாக்கு ஒன்றை அளித்தமையால் வரவு செலவுத் திட்டம் நிறைவேறியது.

நினைவேந்தல்களை வீடுகளில் அனுஸ்டிக்க முடியும்! வியாழேந்திரன்

Leave a Reply