கிண்ணியா விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு கூட்டமைப்பு இரங்கல்

<!–

கிண்ணியா விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு கூட்டமைப்பு இரங்கல் – Athavan News

கிண்ணியா – குறிஞ்சாக்கேணி படகுப்பாதை கவிழ்ந்ததில் பாடசாலை மாணவர்கள் நால்வர் உட்பட ஆறு பேர் மரணமடைந்த சம்பவம் தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு இரங்கல் வெளியிட்டுள்ளது.

நாடாளுமன்றத்தில் இன்றைய தினம் (புதன்கிழமை) உரையாற்றியபோதே நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஸ்ரீதரன் இவ்வாறு கூட்டமைப்பு சார்பில் இரங்கல் வெளியிட்டுள்ளார்.

திருகோணமலை கிண்ணியா –  குறிஞ்சாக்கேணி தடாகத்தில் படகு கவிழ்ந்ததில் சிறுவர்கள் உட்பட 6 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும் படகில் இருந்த 11 பேர் படுகாயமடைந்த நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


Leave a Reply