ஓய்வுபெறும் வயதெல்லை 65 ஆக நீடிப்பட்டதனால் ஓய்வுபெற தீர்மானித்திருப்பவர்கள் குழப்பத்திற்குள்ளாகியுள்ளனர்.
இந்நிலையில், ஜனவரி முதலாம் திகதியின் பின்னர் 55 வயதை கடந்தவர்களுக்கு விருப்பமாயின் ஓய்வுபெற முடியும் என அமைச்சர் ஜனக பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார்.
இன்று நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
ஓய்வுபெறும் வயதெல்லை 65 ஆக நீடிப்பட்டதன் காரணமாக டிசம்பர் மாதம் இறுதியில் ஓய்வுபெற இருப்பவர்கள் தற்போது குழுப்பத்தில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டதால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் இருதய சிகிச்சை பிரிவு திறந்து வைப்பு!






