பசறை, பதுளை, பண்டாரவளையில் 93 பேருக்கு கொரோனா!

பசறை, பதுளை, பண்டாரவளை, அப்புத்தளை ஆகிய பகுதிகளில் இன்று மேற்கொள்ளப்பட்ட ‘ரெபிட் அன்டிஜன்’ பரிசோதனையில் 93 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

பதுளை மாவட்ட பொது சுகாதாரப் பரிசோதகர் சங்க உப தலைவர் எஸ். சுதர்சன் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

மேலும், பசறையில் 18 பேரும், பதுளையில் 12 பேரும், பண்டாரவளையில் 51 பேரும், அப்புத்தளையில் 12 பேருமாக 93 பேர் கொரோனாத் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இவர்கள் அனைவரும் அவர்களது வீடுகளிலேயே, பொது சுகாதாரப் பரிசோதகர்களின் கண்காணிப்புக்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என அவர் தெரிவித்தார்.

பணியிலிருந்து ஓய்வுபெற விரும்புபவர்களுக்கான அறிவிப்பு!

Leave a Reply