தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனை ‘தேசிய தலைவர்’ என நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தபோது குழப்ப நிலை ஏற்பட்டது.
நேற்றைய நாடாளுமன்ற அமர்வின்போது அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் போதைவஸ்து கடத்தலில் ஈடுபட்டார் என்று குறிப்பிட்டிருந்தார்
இதனை மறுக்கும் வகையிலேயே செல்வராசா கஜேந்திரன், ‘தேசிய தலைவர்’ என்று பதத்தை பயன்படுத்தினார்.






