தென்மராட்சி மந்துவில் வடக்கு ஜே/ 346 பகுதியில் விடுதலைப் புலிகள் பயன்படுத்தினர் என்று கூறப்படும் ஒரு தொகுதி ஆயுதங்கள் நேற்று மீட்கப்பட்டன.
அங்குள்ள காணி உரிமையாளர், தென்னந்தோப்பு பகுதியை தோண்டியபோது அவை வெளிக்கிளம்பின என்றும் அவற்றை இராணுவத்தினர் மீட்டனர் என்றும் தெரிவிக்கப்பட்டது.
52 ஆவது டிவிசன் இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து குறித்த விடம் முற்றுகையிடப்பட்டது.
இதன்போது ரி56 மகசின் 517, பைக் குண்டுகள் கிளைமோர் 3, ராக்கிங் பம்1,ரி.எம்.பி. ஐப்போஸ் 8கிலோ, அம்மான் 3,.ஆர்.பி.ஜி.1, மிதிவெடி 23, ஐ.பி.டி. 3, ராங்கிப்பம்1 என பல்வேறு வெடி பொருள்கள் மீட்கப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டது.





