பருத்தித்துறை முனைப்பகுதியில் கடந்த வருடங்களில் மாவீரர் தின நினைவேந்தல் நடைபெற்ற இடத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினரால் சிரமதானப் பணிகள் நடைபெற்றது. அதன்போது அப்பகுதியில் பெருமளவு இராணுவத்தினா மற்றும் புலனாய்வாளாகள் குவிக்கப்பட்டிருந்தனர்.
அவர்கள் அங்கு சிரமதானத்தில் ஈடுபட்டிருந்தவர்களை புகைப்படம் எடுத்து அச்சுறுத்தியும், வாகன இலக்கங்களையும் பதிவு செய்துள்ளனர்.
அத்துடன் சிரமதானம் முடிந்து தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயற்பாட்டாளர்கள் தத்தமது வாகனங்களில் திரும்பிய வேளையில் மோட்டார் சைக்கிள்கள் மற்றும் வாகனங்களில் படையினர் மற்றும் புலனாய்வாளர்கள் பின்தொடர்ந்து வந்தும் அச்சுறுத்தியுள்ளனர்.
இச்சிரமதானத்தில், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன், சட்டத்தரணி காண்டிபன் மற்றும் செயற்பாட்டாளர்கள் கலந்துகொண்டனர்.
இந்நிலையில் அப்பகுதில் தொடர்ந்தும் படையினர் குவிக்கப்பட்டிருப்பதால் மக்கள் மத்தியில் பெரும் அச்ச நிலை ஏற்பட்டுள்ளது.








