
பூநகரி- கெளதாரிமுனை கடலில், வலையில் சிக்கியநிலையில் குடும்பத்தலைவர் ஒருவர் சடலமாக நேற்று மீட்கப்பட்டார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
யாழ்ப்பாணம் புதிய அந்தோனியார் வீதியைச் சேர்ந்த டன்சன் கனிராஜ் (வயது – 42) என்பவரே சடலமாக அடையாளம் காணப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.





