எச்.எம்.எம்.ஹரீஸ், பைசல் காசிம், ஹாபிஸ் நஸீர் அஹ்மட் ஆகிய மூவரும் கட்சி பதவிகளில் இருந்து இடைநிறுத்தம் – SLMC

வரவு செலவு திட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர்கள் கட்சி பதவிகளில் இருந்து நீக்கம்

வரவு செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பின் போது அதற்கு ஆதரவாக வாக்களித்த பாராளுமன்ற உறுப்பினர்களான எச்.எம்.எம் ஹரீஸ் ,பைசால் காசிம் ,நசீர் அஹமட் மூவரும் கட்சி பதவிகளில் இருந்து நீக்கப்பட்டதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அறிவித்துள்ளது. கட்சியின் உயர்மட்டக்குழு வரவு செலவு திட்டத்திற்கு ஆதரவு அளிக்க வேண்டாம் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இருந்த நிலையில் கட்சியின் முடிவுக்கு எதிராக செயல்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக இந் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.இரு தினங்களுக்கு முன் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் முடிவுக்கு எதிராக வாக்களித்த பாராளுமன்ற உறுப்பினர்களும் கட்சி தலைமை பீடத்தினால் பதவியில் இருந்து நிறுத்தப்பட்டமை குறிப்பிடதக்கது.

Leave a Reply