திருகோணமலை – கிண்ணியா, குறிஞ்சாக்கேணியில் படகுப் பாதை விபத்து தொடர்பில் கைதுசெய்யப்பட்டிருந்த அந்தப் படகுப் பாதையின் உரிமையாளர் மற்றும் அதனை இயக்கிய இருவவர் உட்பட மூவரும் எதிர்வரும் 8ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இதனை பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
நேற்று(23) இடம்பெற்ற சம்பவத்தில், சிறுவர்கள் உட்பட அறுவர் மரணமடைந்ததோடு, 20 பேர் காயமடைந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.






