ஐ.நாவின் நிபுணர் ரொமோயா நாளை இலங்கை வருகின்றார்!

தற்கால அடிமை முறைகள் பற்றிய ஐ.நாவின் சிறப்பு அறிக்கையாளர் ரொமோயா ஒபோகோடா நாளை வெள்ளிக்கிழமை இலங்கை வருகின்றார்.

டிசெம்பர் 3ஆம் திகதி வரை நாட்டில் தங்கியிருக்கும் அவர், ஆடைத் தொழில்சாலை, தேயிலை தோட்டங்கள், சுற்றுலா மற்றும் வீட்டு வேலை உள்ளிட்ட பல்வேறு பொருளதார துறைகளில் உள்ள தொழிலாளர்களின் நிலைமைகள் குறித்து ஆய்வு செய்வார்.

நாட்டில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் உட்பட ஒழுக்கமான வேலைக்கான அணுகலை தடுக்கும் சட்டங்கள் மற்றும் கொள்கைகள், முறையான தடைகளை நடைமுறைப்படுத்தலை மதிப்பிடவும் விசேட அறிக்கையாளர் உத்தேசித்துள்ளார்.

நிலையான அபிவிருத்தியின் இலக்கான 8.7ஐ அடைவதற்கு இலங்கை அரசாங்கம் செய்துள்ள அர்ப்பணிப்புகளின் வெளிச்சத்தில் இந்த விடயத்தில் எந்தளவு முன்னேற்றம் எட்டப்பட்டது. எத்தகைய குறைபாடுகள் நீடிக்கின்றது.

அவற்றை எவ்வாறான நடவடிக்கைகள் மூலம் தீர்க்கலாம் என்பது குறித்தும் அவர் ஆராய்வார் என்று தெரியவருகின்றது.

நல்லிணக்கம், மனித உரிமைகளில் இலங்கை முன்னேற்றம் கண்டுள்ளது: ஐ.நாவின் உதவி செயலரிடம் பீரிஸ் தெரிவிப்பு!

Leave a Reply