ஜனாதிபதி – பிரதமரின் பாதுகாப்பு வாகனங்களுக்கு அதிவேக நெடுஞ்சாலையில் கட்டணம் இல்லை

<!–

ஜனாதிபதி – பிரதமரின் பாதுகாப்பு வாகனங்களுக்கு அதிவேக நெடுஞ்சாலையில் கட்டணம் இல்லை – Athavan News

அதிவேக நெடுஞ்சாலைகளை பயன்படுத்தும் ஜனாதிபதி மற்றும் பிரதமரின் பாதுகாப்பு தொடரணிக்கு சொந்தமான அனைத்து வாகனங்களும் இலவசமாக பயணிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவினால் இதுகுறித்த விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

மேலும், நோயாளர்களை ஏற்றிச் செல்லும் அனைத்து நோயாளர் காவு வண்டிகளும் அதிவேக நெடுஞ்சாலையை இலவசமாகப் பயன்படுத்த முடியும் எனவும் குறித்த வர்த்தமானி அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Leave a Reply