நாவலர் மணிமண்டபத்தில் ஆறுமுகநாவலர் குருபூஜை நிகழ்வு!

இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில், நல்லூர், ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் மணிமண்டபத்தில் நாளை மறுதினம் சனிக்கிழமை, காலை 8 மணிக்கு ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் பெருமானின் குருபூஜை நிகழ்வு இடம்பெறவுள்ளது என இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களப் பணிப்பாளர் அ.உமாமகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

மங்கல விளக்கேற்றல், விடைக்கொடியேற்றல் நிகழ்வுகளோடு ஆரம்பமாகவுள்ள இந்நிகழ்வில் இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்கள நாவலர் மணிமண்டப உத்தியோகத்தர் க.நிஜலிங்கத்தின் ஒழுங்கமைப்பில் குருபூஜை வழிபாடும், திருமுறை ஓதலும் இடம்பெறவுள்ளது.

நல்லை திருஞானசம்பந்தர் ஆதீன முதல்வர், இரண்டாவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாசார்ய சுவாமிகள் முன்னிலை வகிக்க, இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் திருமதி ஹேமலோஜினி குமரன் தலைமையில் தெல்லிப்பழை, ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தானத்தின் தலைவரும் சிவபூமி அறக்கட்டளையின் தலைவருமாகிய செஞ்சொற்செல்வர், கலாநிதி ஆறு.திருமுருகன் பிரதம விருந்தினராகக் கலந்து சிறப்பிக்க, சைவப்புலவர், ஏ. அனுசாந்தனால் ‘நாவலர் பெருமானின் வாக்கும் வாழ்வும்’ என்ற தலைப்பிலான சிறப்புரையோடும் தெல்லிப்பழை பன்னாலை, கணேசா அறநெறிப் பாடசாலை மாணவர்களின் கலை நிகழ்வுகளோடும் ஆக்கத்திறன் ஆளுமையை வெளிப்படுத்தும் மாணவர்களுக்கான பாராட்டு நிகழ்வோடும் இடம்பெறவுள்ளது.

50 அடி பள்ளத்தில் வீழ்ந்த ஆட்டோ: ஒருவர் பலி: மூவர் காயம்!

Leave a Reply