மாவீரர் நாள் நிகழ்வுகள் தொடர்பிலான முல்லைத்தீவு நீதிமன்றின் தடை உத்தரவுக்கு எதிராக நகர்த்தல் பத்திரம் தாக்கல்!

முல்லைத்தீவு மாவட்டத்தில் மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்துவதற்கு கடந்த 17ஆம் திகதி மற்றும் 23 ஆம் திகதிகளில் முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த அரசியல் பிரமுகர்கள் உள்ளிட்ட அறுபத்தொன்பது பேருக்கான தடை உத்தரவுகள் நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்டிருந்தது.

முல்லைத்தீவு, முள்ளியவளை ஒட்டுசுட்டான், மாங்குளம், மல்லாவி ஐயன்குளம், புதுக்குடியிருப்பு ஆகிய ஏழு பொலிஸ் நிலையங்களின் கோரிக்கைக்கு அமைய குறித்த அறுபத்தொன்பது பேருக்கான தடை உத்தரவுகள் நீதிமன்றத்தினால் வழங்கப்பட்டிருந்தது.

மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுக்கான தடை உத்தரவை நீக்கக்கோரி நகர்த்தல் பத்திரம் ஊடாக வழக்கு விசாரணைகள் முல்லைத்தீவு நீதிமன்றத்தில் தற்போது இடம்பெற்று வருகின்றது.

முல்லைத்தீவு மாவட்ட சட்டத்தரணி எஸ் தனஞ்சயன் அவர்கள் குறித்த வழக்கில் ஆயராகி உள்ளார்.

இலங்கையை மிரட்டும் எலிக்காய்ச்சல்: 5275 பேர் பாதிப்பு!

Leave a Reply