போதைப்பொருள் மற்றும் ஹெரோயினுடன் ஒருவர் கைது!

பாணந்துறை – வலானை மத்திய ஊழல் ஒழிப்பு பிரிவின் அதிகாரி என தம்மை அடையாளப்படுத்தி, போதைப்பொருள் மற்றும் மதுபான வர்த்தகர்களிடம் கப்பம் கோரிய ஒருவர் நேற்று ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

அத்துடன், காவல்துறை அதிகாரி என தம்மை அடையாளப்படுத்தி, கப்பம் கோரினால், அது தொடர்பில், பாணந்துறை வலான மத்திய ஊழல் ஒழிப்பு பிரிவுக்கு அறிவிக்குமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இதன்படி, குறித்த பிரிவின் 038 224 1187 அல்லது 038 223 4314 ஆகிய தொலைப்பேசி இலக்கங்கள் ஊடாக அறியப்படுத்துமாறு காவல்துறை தெரிவித்துள்ளது.

5 இலட்சம் ரூபா கப்பத்தைப் பெற்றுக்கொள்ள ஹொரனை நகருக்கு பிரவேசித்திருந்த சந்தர்ப்பத்தில் குறித்த நபர் கைதானார்.

மேலும், சந்தேகநபர், பல தொழிலதிபர்களை மிரட்டி கப்பம் கோரியுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

பிறசெய்திகள்

Leave a Reply