
வைத்தியசாலைகளுக்காக முன்பதிவு செய்யப்பட்ட மருந்துகள் தற்போது பெற்றுக் கொள்ளப்படுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
மருந்துப் பற்றாக்குறையால் நோயாளர் பராமரிப்பு சேவைகள் எந்தவொரு வைத்தியசாலையிலும் கிடைப்பதில்லை என அதன் செயலாளர் ஜனக ஸ்ரீ சந்திரகுப்த குறிப்பிட்டார்.
சில குறைபாடுகள் காணப்பட்டாலும், சத்திரசிகிச்சைகள் வழமையாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக தேசிய வைத்தியசாலையின் பணிப்பாளர் குறிப்பிட்டுள்ளார்.
பற்றாக்குறையான மருந்துகளே பெறப்பட்டு வருவதாகவும் வைத்தியசாலையின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
இதேநேரம், ஒரு சில தட்டுப்பாடுகள் காணப்படுகின்ற போதிலும் நோயாளர்களுக்கான சிகிச்சைகள் உரியவாறு முன்னெடுக்கப்படுவதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பணிப்பாளர், வைத்தியர் குமார லியனகே தெரிவித்துள்ளார்.
தட்டுப்பாடு நிலவிய மருந்துக்கள் தற்போது கிடைக்கப்பெறுவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
பிறசெய்திகள்

