திருமலையில் யானையொன்று உயிரிழப்பு!

திருகோணமலை சம்பூர் பொலிஸ் பிரிவிலுள்ள சந்தனவெட்டை பகுதியில் உள்ள வயல் வெளியில் இன்று செவ்வாய்கிழமை (20) காலை , யானையொன்று இறந்த நிலையில் காணப்படுவதாக சம்பூர் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த யானையானது தாக்கப்பட்டு உயிரிழந்ததா? அல்லது நோய்வாய்ப்பட்டு உயிரிழந்ததா அல்லது உயிரிழப்புக்கு வேறு ஏதாவது காரணங்கள் உண்டா என்பது தொடர்பில் இதுவரை கண்டறியப்படவில்லையெனவும் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்கப்படுவதாகவும் சம்பூர் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த யானையின் உயிரிழப்புச் சம்பவம் தொடர்பில் சேருநுவர வனஜீவராசிகள் திணைக்களத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் சம்பூர் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

பிறசெய்திகள்

Leave a Reply