இலஞ்சத்தை உள்ளூராட்சி சபை உறுப்பினர்களுக்கு சட்டமாக மாற்றிய பஸில்- அம்பலப்படுத்திய சொய்சா!

2005 ஆம் ஆண்டு நானும் இணைந்தே மஹிந்த ராஜபக்சவை நாட்டின் ஜனாதிபதி பதவிக்கு கொண்டு வந்தோம். ஆனால் அவரது குடும்ப உறுப்பினர்கள் நாட்டின் நிர்வாகத்தில் தலையிட்டு நாட்டை அழிவை நோக்கிக் கொண்டு சென்றனர் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் விஜித விஜயமுனி சொய்சா தெரிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் கொலன்னாவை தொகுதி அதிகாரசபைக் கூட்டத்தில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார் .

அவர் மேலும் தெரிவிக்கையில்

2005 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் 5 மாவட்டங்களில் தேர்தல் பரப்புரைகளை நான் பொறுப்பேற்று மஹிந்தவை ஜனாதிபதி பதவிக்கு கொண்டு வந்தோம் .

சிறிது காலம் சென்றதும் அவரது பிள்ளைகளின் கைகள் ஓங்கின . மாமா- என்றனர் . அங்கிள்- என்றனர் . பின்னர் மச்சான்- என்றனர் .

இறுதியில் அவர்கள் இரவில் போடும் ஆட்டங்கள் பற்றி எமக்கு எதிரில் பேச ஆரம்பித்தனர் . அடுத்தது பாரியார் . பிள்ளைகள் ஒரு பக்கம் . இரண்டு தம்பிமார் அமெரிக்காவில் இருந்து வந்தனர் .

இவர்களில் ஒருவர் மிஸ்டர் 10 வீதம் . இலஞ்சம் என்பதை உள்ளூராட்சி சபை உறுப்பினர்களுக்கு சட்டமாக மாற்றிய பஸில் இலங்கைக்கு வந்தார் . அவருக்கு ஏழு மூளைகள் உள்ளன என்று கூறினர் .

ஆனால் எமது நாட்டின் மீது ஏழு இடிகள் விழுந்தன . சீக்கிரமாகச் செல்ல வேண்டும் என்று கூறி அவரை விமானத்தில் ஏற்றி அனுப்பி இருந்தால் நன்றாக இருந்திருக்கும் . தற்போது சென்று விட்டார் மகிழ்ச்சி . மீண்டும் இந்தப் பக்கம் வர வேண் டாம் – என்றார் .

பிறசெய்திகள்

Leave a Reply