முடிந்தால் மொட்டுக் கட்சியிலிருந்து இருந்து தம்மை நீக்குமாறு பீரிஸ் சவால்!

முடிந்தால் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பதவியில் இருந்து தம்மை நீக்குமாறு சவால் விடுவதாக சுதந்திர தேசிய பேரவையை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

அதை சட்டரீதியாக செய்ய முடியாது என்பது தெரிந்ததால் தான் கட்சி இன்னும் அவ்வாறு செய்யவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சுதந்திர தேசிய பேரவை இன்று (21) பாராளுமன்றத்திற்கு அருகில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

பிறசெய்திகள்

Leave a Reply