தங்களுக்கு அவசியமான உற்பத்திகளை மேற்கொண்டு வாழ்க்கையை நாடாத்துவதற்குரிய சமூகமாக மாற வேண்டும்-ஜயவிக்ரம!

வழங்கப்படுகின்ற நிவாரண உதவிகளை மாத்திரம் நம்பி வாழ்கின்ற சமூகமாக இருப்பதனை விட தங்களுக்கு அவசியமான உற்பத்திகளை மேற்கொண்டு வாழ்க்கையை நாடாத்துவதற்குரிய சமூகமாக மாற வேண்டிய தேவை காணப்படுவதாக திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்டச் செயலாளருமான பி.எச்.என். ஜயவிக்ரம தெரிவித்தார்.

இன்று (21) கிண்ணியா பிரதேச செயலகத்தில், அப்பிரதேச செயலகத்திற்குட்பட்ட 700 குடும்பங்களுக்கான
உலர் உணவுப் பொதிகள் வழங்கும் நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அரசாங்க அதிபர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தாங்கள் வசிக்கின்ற பிரதேசத்தில் இருக்கக்கூடிய சிறிய இடமாயினும் அந்த இடங்களுக்கு அவசியமான காய்கறிகளை உற்பத்தி செய்து தேசிய உற்பத்தியை அதிகரிக்கச் செய்வதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளல் காலத்தின் தேவையாகக் காணப்படுகின்றது. நாடு தற்போது முகங்கொடுத்திருக்கக் கூடிய ஆதரநெருக்கடிக்கு மத்தியில் அரச சார்பற்ற நிறுவனங்கள் மக்களுடைய வயிற்றுப் பசியைப் போக்குவதற்கு இவ்வாறான செயற்றிட்டத்தைக் கொண்டுவந்து நடைமுறைப்படுத்துக்கின்றமை பாராட்டத்தக்கதாகும்.

அரசாங்கம் தற்போத உற்பத்தி செயன்முறையை வலுப்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாக இதன்போது அரசாங்க அதிபர் மேலும் தெரிவித்தார்.

ஒரு குடும்பத்துக்கு வழங்கப்பட்ட இவ்வுலர் உணவுப் பொதியினுடைய பெறுமதி ரூபா 10,000 ஆகும். MUSLIM HANDS நிறுவனம் இதற்கான அனுசரணையை வழங்கியது.

இந் நிகழ்வில் கிண்ணியாபிரதேச செயலாளர் எம்.எச். கனி, கிண்ணியா நகரசபை தவிசாளர் எம்.நிவாஸ், கிண்ணியா உதவிப் பிரதேச செயலாளர் உள்ளிட்ட அரச அதிகாரிகள்,அரச சார்பற்ற நிறுவனத்தினுடைய பிரதிநிதிகள் மற்றும் பயனாளிகள் என பலர் கலந்து கொண்டனர்.

பிறசெய்திகள்

Leave a Reply