கைதான பேராதனை பல்கலைக்கழக மாணவர்களுக்கு பிணை

கண்டி,செப் 22

சட்ட பீட மாணவர்களை தாக்கிய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பேராதனை பல்கலைக்கழக கலைப்பீட மாணவர்கள் மூவருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

மூவரும் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டதாக பேராதனை பொலிஸார் தெரிவித்தனர். கடந்த செப்டெம்பர் 14ஆம் திகதி பீடத்தின் சிற்றுண்டிச்சாலையில் பகிடிவதைக்கு எதிர்ப்பு தெரிவித்த மாணவர்களை கலைப் பீட மாணவர்கள் தாக்கியதாகக் கூறப்படுகிறது.

தாக்குதலுக்கு உள்ளான மாணவர்களின் வாக்குமூலத்தின் அடிப்படையில், மூவரையும் பல்கலைக்கழக அதிகாரிகள் இடைநிறுத்தியுள்ளனர்.

இதற்கிடையில், அதிகாரிகள் வழங்கிய அழைப்பாணையை அடுத்து மூவரும் நேற்று மாலை பேராதனை பொலிஸில் ஆஜராகியிருந்தனர்.

பகிடிவதையை எதிர்த்ததற்காக பேராதனை பல்கலைக்கழகத்தின் கலைப் பீட மாணவர்களால் சட்ட பீட மாணவர்கள் குழுவொன்று தாக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சட்ட பீட மாணவர்கள் பகிடிவதைக்கு எதிராக இருந்ததாகவும், அதற்கு ஆதரவான கலைப் பீட மாணவர்கள் குழுவினால் இந்த தாக்குதலை நடத்தியதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாக்குதலில் காயமடைந்த நான்கு மாணவர்கள் பேராதனை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Leave a Reply