மது, சிகரெட் நிறுவனங்கள் இனி தப்பிக்க முடியாது! – அறிமுகமாகவுள்ள புதிய வரி

எதிர்கால அரசாங்கத்தின் கீழ் முறையான வரி விதிப்புகளுக்கு உட்பட்டு மதுபானம் மற்றும் சிகரெட்டுகளுக்கு புதிய வரி முறையை அறிமுகப்படுத்த வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தி கோரியுள்ளது.

தற்போது, ​​மற்ற பொருட்களுடன் ஒப்பிடுகையில், மது மற்றும் சிகரெட்டுகளுக்கு மிகக் குறைந்த வரி விதிக்கப்படுகிறது.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவும் நேற்றைய தினம் பாராளுமன்றத்தில் விசேட அறிக்கையொன்றில் இதனை வெளிப்படுத்தியுள்ளார்.

இந்த மது சிகரெட் உற்பத்தியாளர்கள் குறிப்பிட்ட சில அதிகாரிகளுக்கும், பல்வேறு அமைச்சர்களுக்கும் வரப்பிரசாதம், சலுகைகள், சுகபோகங்களை வழங்கி, குறைந்த சதவீத வரி விதித்து அதிக இலாபம் ஈட்டுவதாக பலராலும் குற்றம் சாட்டப்படுகிறது.

இந்த நிறுவனங்கள் கடந்த காலம் முழுவதும் இவ்வாறான முறையில் செயற்பட்டு வருவதாகவும், எதிர்காலத்தில் இது தொடர்பில் பல விசேடமான கருத்துக்களை வெளியிடுவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் தயாராகவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

பிறசெய்திகள்

Leave a Reply