
யாழ்ப்பாணம், பொம்மைவெளிப் பகுதியில் உயிர்கொல்லியான ஹெரோய்ன் போதைப்பொருளை விற்பனை செய்த குற்றச்சாட்டில் 11 வயதுச் சிறுமி ஒருவர் நேற்றுக் கைது செய்யப்பட்டுள்ளார்.
சிறுமியை போதைப் பொருள் விற்பனைக்கு ஊக்குவித்த குற்றச்சாட்டில், சிறுமியின் தாயைக் கைது செய்வதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றது என்று பொலிஸார் தெரிவித்தனர்.
சிறுமியின் தந்தை போதைப்பொருள் விற்பனை செய்த குற்றத்துக்காக சிறைத்தண்டனை அனுபவித்து வருகின்றார்.
தாயுடன் தங்கியுள்ள சிறுமி போதைப்பொருள் விற்பனைக்கு ஊக்குவிக்கப்பட்டுள்ளார் என்று கூறப்படுகின்றது.
இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.




