
இலங்கைக்கும் சர்வதேச நாணய நிதியத்திற்கும் இடையிலான பணியாளர் மட்ட ஒப்பந்தம் தொடர்பில் இதுவரையில் அமைச்சரவைக்கு அறிவிக்கப்படவில்லை என ஜனாதிபதி தெரிவித்ததாக சபாநாயகர் குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்றில் இன்று (வியாழக்கிழமை) உரையாற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கும் சர்வதேச நாணய நிதியத்திற்கும் இடையிலான பணியாளர் மட்ட ஒப்பந்தம் சர்வதேச நாணய நிதிய சபையின் அங்கீகாரத்திற்கு உட்பட்டது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், அது தொடர்பில் இதுவரையில் அமைச்சரவைக்கு அறிவிக்கப்படவில்லை என ஜனாதிபதி தமக்கு அறிவித்ததாக சபாநாயகர் கூறியுள்ளார்.





